வடமாகாணத்தின் பின்தாங்கியுள்ள விவசாயகளுக்கான இழப்பீடு காசோசலைகள் வழங்கி வைப்பு!

வடமாகாணத்தின் பின்தாங்கியுள்ள விவசாயகளுக்கான  நலன் பேணும்  திட்டத்தின் கீழ்  இன்று யாழ்ப்பாண, கிளிநொச்சி  மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 74  பயனாளிகளுக்கு இழப்பீடு காசோசலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது 

நீண்டகால வரலாற்றைக் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் நலன் பேணும்  திட்டத்தின் கீழ் வருடந்தோறும் பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்த வருடம் நாடு பூராகவும் 10மில்லியன் ரூபாய் செலவில் சமூக நலன் சார் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும்  சுமார் மூன்று மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட  நிதியீட்டத்தில் சமூக நலன் நோக்கு திட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

 குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன்,  யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், வடக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர் மற்றும் கால்நடை வளர்ப்பு திணைக்கள பணிப்பாளர், வடக்கு யாழ்ப்பாண மாவட்ட முகாமையாளர்கள், விரிவாக்கம் பிரிவு முகாமையாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்து தமது கல்வியினை தொடர்ந்து முன்னெடுத்து வரும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய குடும்பங்களின் பிள்ளைகள், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும் புலமைப் பரிசில் தொகையினைப் பெற்றுக் கொண்டார்கள்.

பால் உற்பத்தி மற்றும் கால்நடை பண்ணையாளர்களின் தொழில் மேம்பாட்டுக்காக 52 பேருக்கு புலமைப்பிரச்சிலும் வழங்கி வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply