பிபா உலக கிண்ணம் : ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றி !

பிபா உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரில் மெக்சிகோ அணையை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் ஆர்ஜன்டினா அணியின் லயனல் மெஸ்ஸி 64வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார்.

இரண்டாவது பாதியில் மாற்று வீரராக களமிறங்கிய பெர்னாண்டஸ், ஆட்டநேரம் முடிவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன் கோல் அடிக்க ஆர்ஜன்டினாவின் வெற்றி மேலும் உறுதியானது.

சவுதி அரேபியாவிடம் முதல் ஆட்டத்தில் தோற்ற அர்ஜென்டினா, குழு சி.யில் ஒருவெற்றியோடு 3 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை, குழு டி பிரிவில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் டென்மார்க் அணையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே 61ம் மற்றும் 86வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடிக்க டென்மார்க் அணி சார்பாக எண்ட்ரேயஸ் கிறிஸ்டென்சன் 68வது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *