ஓமானில் இருந்து தப்பி வந்த இரு பெண்கள்

வேலை நிமித்தமாக ஓமான் நாட்டிற்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இரண்டு பெண்கள் இன்று (27) இலங்கை திரும்பியுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று அதிகாலை 4.40 மணியளவில் இலங்கை விமானம் மூலம் நாட்டை வந்தடைந்ததாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பான வீட்டில் தங்கியிருந்த இரு பெண்களே இவ்வாறு அங்கிருந்து தப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரண்டு பெண்களும் அவர்களது உறவினர்களிடம் இருந்து கிடைத்த பணத்தில் டிக்கெட் வாங்கி இலங்கை வந்துள்ளடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply