யாழ் பல்கலையில் பேரெழுச்சியுடன் மாவீரர்களுக்கு ஈகைச்சுடடேற்றி அஞ்சலி!

தமிழ் தேசத்தின் விடியலுக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூறும் மாவீரர் நாளின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் இலங்கை உட்பட்ட  உலக நாடுகளின் நினைவுகூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சற்றுமுன் யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

முதலில் மாவீரரின் தாயாரால்  பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களால் மலரஞ்சலி  செலுத்தப்பட்டதோடு  தீபங்கள் ஏற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply