சுமார் 96 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறை உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷமேந்திர ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள காவல்துறை உத்தியோகத்தர்களின் நீரிழிவு தொடர்பான சிக்கல்களைக் கண்டறியும் விசேட செயற்திட்டம் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் உள்ள காவல்துறை உத்தியோகத்தர்களின் கண் நோய்கள் தொடர்பான பரிசோதனைகளும் நடத்தப்படவுள்ளதாக காவல்துறை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷமேந்திர ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.