_63846ad4dc2af.jpg)
இன்றைய பாராளுமன்ற சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிக்கையில்:
நாட்டின் எதிர்காலம் என்று சொல்லப்படும் இளைஞர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர்.பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது.ஆனாலும் ஒரு நாட்டுக்கு கல்வி,சுகாதாரம் முக்கியமானதாகும்.அரச செலவில் மருத்துவ கல்லூரிகளில் படித்து இங்கே பயிற்சிகளை முடித்த பலர் காணாமல் போயுள்ளனர்.அவர்கள் வெளிநாட்டில் சேவையாற்ற விரும்புகின்றனர்.இதுவரை சுமார் 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றார்.





