_63847c853149f.jpg)
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் எரிவாயு கொள்வனவில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டதாகவும், அதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில், எதிர்வரும் பண்டிகை காலத்திலிருந்து அடுத்த மாதம் வரை ஒரு இலட்சம் எரிவாயுவை சந்தைக்கு வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.





