தேசிய ரீதியில் சாதனை படைத்த தெல்லிப்பளை மாகாஜனாக் கல்லூரி வீரங்கனைகளுக்கு இன்றையதினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி 20 வயதிற்கு உட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி தேசிய மட்டத்தில் வெற்றி வாகை சூடி சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இவ்வாறு கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ, உதவி பிரதேச செயலாளர் க.சரோஜினி, கல்லூரி அதிபர்கள், கல்விச்சமுகத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.













