2023ல் இலங்கையின் நிலை எவ்வாறு இருக்கும்? பிரிட்டனில் இருந்து வந்த அதிர்ச்சி தகவல்

2024ம் ஆண்டிற்கு முன்னதாக இலங்கையில் தேர்தல்கள் இடம்பெறும் என பிரிட்டனின் த எக்கனமிஸ்ட் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும், ஆனால் 2022 போல அது மோசமானதாக இருக்காது என எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது.

2023இன் முன்னால் உள்ள உலகம் என்ற தனது புதிய வெளியீட்டில் த எக்கனமிஸ்ட் இதனை தெரிவித்துள்ளது.

2022 ஜூலையில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க மக்களின் அதிருப்தியை கட்டுப்படுத்துவதற்கு சிரமப்படுவார் என எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் சகாவான தினேஸ் குணவர்த்தனவை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தெரிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசி என தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் 2024 முன்னர் தேர்தல்கள் இடம்பெறும் என எக்கனமிஸ்ட் தெரிவித்துள்ளது.

Leave a Reply