
பிரித்தானியாவிலும், இலங்கையிலும், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சட்ட விரோதமாக செயற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, பிரித்தானிய அரசர் சார்லஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குழுவொன்று இவ்வாறு மன்னருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
‘எஸ்.எல். தேசய’ யூடியூப் சேனலை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஆர்வலர் தர்ஷன ஹந்துங்கொட உட்பட சிலர் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். கடிதத்தை அவர்கள் இன்றைய தினம் (28) பிரித்தானிய உயர்ஸ்தானிகாரியாலத்துக்குச் சென்று கையளித்துள்ளனர்.
அதேவேளை விஷால ஹேரத்து டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





