<!–
யாழ். பல்கலைக்கழகம் உருவாவாற்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப்பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 92ஆவது குருபூசை நிகழ்வுகள் இடம்பெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகம், பூஜையுடன் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், உருவப் படத்துக்கும் மலர்மாலை அணிவித்தும் வணக்கம் செலுத்தியிருந்தார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.