மூதூரில் வீட்டுத் தோட்டச் செய்கையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

அரசாங்கத்தின் வயற் பாடசாலை திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சேதன வீட்டுத் தோட்ட அறுவடை விழாவும், வீட்டுத் தோட்டச் செய்கையாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (29) செவ்வாய்கிழமை மூதூர் இத்திக்குளம் பகுதியில்  இடம்பெற்றது.

இதன்போது சேதனப் பசளை மூலம் செய்கைபண்ணப்பட்ட பயிற்றை, கொச்சி,வெண்டி,பீக்கை போன்ற வீட்டுத்தோட்ட காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.குஸைன் கலந்து சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.இம்தியாஸ் அஹமட், பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.சிவசங்கர்,விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





Leave a Reply