முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச வழக்கை ஜனவரி 19ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் தமக்குக் கிடைக்கவில்லை என பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.
வர்த்தகத்துறை அமைச்சராகப் பணியாற்றிய போது, சதொச ஊழியர்கள், தங்கள் உத்தியோகப் பணிகளில் இருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





