கொள்ளையிட சென்ற 6 பேர் இளைஞர்களால் மடக்கிப்பிடித்து நையப்புடைப்பு

முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வீடுகளுக்குள் புகுந்து திருட முயன்ற 3 பேர் உட்பட 6 பேரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது குறித்த கொள்ளையர்கள் மந்துவில் கிராம இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருடச்சென்றவர்களில் முதலில் 3 பேரை பிடித்ததாகவும், பின்னர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொண்ட தேடுதலில் மேலும் 3 பேரும் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடமிருந்து கோடரி, முகமூடி. கத்தி போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கொள்ளையர்கள் அனைவரும்  புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply