சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யார் வளத்தை கைப்பற்றுவது என்ற போட்டி அதிகரித்துள்ளது- அண்ணாமலை தகவல்!

இலங்கையின் உடைய நிலைமை யாருடைய கையில் இருக்கின்றது என்ற போட்டி .அதாவது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யார் வளத்தை கைப்பற்றுவது என்ற போட்டி நிலவுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனா அண்மையில் அன்பளிப்பாக டீசல் தருவதாக கூறி ஒரு கப்பலை கொண்டு வந்த டீசலை வழங்க எங்களுடைய கடற்தொழில் அமைச்சர் அதனை பெற்றுக்கொண்டார்.பெற்றுக் கொண்ட டீசலால் வடபகுதிக்கு என்ன நன்மை உள்ளது .விரல்களினால் எண்ணினால் 5 அல்லது 10 வளங்கள் தான் ஓடுகின்றது.இந்த டீசல் சில நேரங்களில் தென்னிந்திய நாடுகளுக்கு பயன்படலாம் என்று அவர் கூறினார்.

வாயை பொத்தி வைத்துக் கொண்டு முன்னால கொத்து ரொட்டியும் பிரியாணியும் வைத்த மாதிரி தான் இந்ந சீனா.எங்களுடைய தீபவக பகுதியை கைப்பற்றி அட்டை பண்ணை அமைத்துள்ளார்கள்.இதனால் சீனாவுக்கு மட்டும் தான் இலாபம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆபிரிக்கா,எதியோப்பியா போன்ற நாடுகள் பஞ்சத்தில் வாழுகின்றார்கள்.அந்த நாட்டுக்கு கொடுக்காமல் ஏன் இலங்கைக்கு சும்மா தருகின்றீர்கள்.நீங்கள் முடிந்தால் இலங்கை நல்லாக இருக்கனும் என்று நினைத்தால் எல்லாத்தையும் திறந்து விடுங்கள்.நீங்கள் அட்டை பண்ணையை  அடைத்து வைத்திருப்பதால் நாங்கள் தாழமாட்டோம்.நீரில் மிதக்கும் தொழிலாளி நாங்கள்.

சீனா முடிந்தால் அல்லது இங்கிருக்கும் பிரமுகர்கள், அரசியல் வாதிகள்,அமைச்சர்கள் முதற் கொண்டு ஆனையிறவை வந்து திறந்து போட்டு கதையுங்கோ.நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீங்க சாவக்கெடு என அவர் தெரிவித்தார்.

நாட்டுக்கு ஒரு வளம் சேர்ப்பது பற்றி இன்றும் கூட நினைக்கவில்லை.யாராவது பிச்சை தருவாங்க அல்லது சும்மா தருவினம் அதை கை ஏந்தி வாங்கலாம் என்று நீங்கள் நினைத்துன் கொண்டு இருக்கின்றீர்கள்.ஏன் அதை வாங்க வேண்டும்?உங்களுக்கு அறிவு இல்லi என்றால் பிறகு ஏன் அரசியலுக்கு வந்தீனிங்க ?

மண்ணெய் தொடர்பில் செய்தியாளரினால் எழுப்பட்ட கேள்விக்கு 

மண்ணெய் வழங்காமை விட்டதற்கு காரணம் இந்தியா.வடபகுதிக்கு மண்ணெய் வரும் என்றால் உடனடியாக எல்லா தொழிலாளிகளும் கடலுக்கு போகனும்.இலங்கை அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ததை நிறுத்தி இருக்கனும்.விவசாயத்துக்கு மண்ணெய் தான் தேவை தவிர டீசல் இல்லை.அதே போல கடற்தொழிலுக்கு டீசல் தேவையில்லை.மண்ணெய் தான் தேவை.

வடபகுதியில், கொஞ்ச வள்ளம் தான் இருக்கு.அந்த படகுகளுக்கு மட்டும் டீசல் தேவைப்படுகின்றது.நீங்கள் ஏன் மண்ணெயை இறக்குமதி செய்யாமல் டீசல்,பெற்றோலை இறக்குமதி செய்கின்றீர்கள்?.வடபகுதி,தென்பகுதிகளுக்கு மண்ணெய் வழங்கி பாருங்கோ மீனவர்கள் எப்படி தொழில் செய்கின்றார்கள் என்று பாருங்கோ.

எங்களுடைய வளம் எங்களுக்கு காணும்.யாரிடமும் பிச்சை எடுத்தோ,சும்மா வாங்கியோ செய்ய வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply