எதிர்காலத்திற்கு வித்திடுவோம்! திருகோணமலையில் புதிய செயல் திட்டம்!!

திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாரதிபுரம் பராசக்தி வித்தியாலய வளாகத்தில் பனை மரங்கள் நடும் திட்டம் நேற்று (29) இடம் பெற்றது.

பனை அபிவிருத்தி அதிகார சபை மூலமாக இத் திட்டம் இடம் பெற்றுவருகின்றன. இயற்கை வளங்களை பேணி பாதுகாப்பதன் மூலமாகவும் மரங்களை வளர்ப்பதன் ஊடாகவும் நமது சந்ததிகளின் மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் வழி வகுக்கும் என தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இம் மரநடுகை நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் குமார் மற்றும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் உட்பட பொது மக்கள்,ஆசிரியர்கள்,பனை அபிவிருத்தி சபை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply