
அவர் மேலும் தெரிவிக்கையில், கிண்ணியா வைத்தியசாலை தற்போது இட பற்றாக்குறையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது, அங்கு X-Ray இயந்திரம் கிடைக்கப்பெற்ற போதிலும் X-Ray பிரிவினை ஆரம்பிக்கமுடியாத நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு வருகின்ற நோயாளிகள் பல கிலோமீட்டர் சென்று சிகிச்சைபெறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் அரசாங்கம் அவசரமாக X-Ray பிரிவினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவகம் அதிகூடிய சனத்தையும் பிரதேசத்தையும் கொண்டு காணப்படுகின்றமையால் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை தோப்பூர் பிரதேசத்தை மையமாக கொண்டு புதிய அலுவலகம் அமைக்கவேண்டும் என்பதுடன் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தற்காலிக கட்டத்தில் காணப்படுவதால் அதற்கான நிரந்தர கட்டிடத்தையும் அதற்கான வாகன வசதிகளையும் ஏற்படுத்தித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.
திருமலை மாவட்டத்தில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறார்கள். தற்போது சிறுவயதினர் உட்பட புற்று நோயாளர்கள் மரணம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற தொலைத்தொடர்பு கோபுரங்களா? என்று மக்கள் சந்தேகின்றனர். திருமலை மாவட்டத்தில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கான காரணம் என்னவென்பதை கண்டறிய விஷேட குழுவென்றினை அமைக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.





