வரி விதிக்கும் யோசனை எதிர்காலத்தில் நிலைமை மோசமாக்கும் – ஹரிணி

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு மாதத்திற்கு சத்தான உணவை உண்பதற்கு ஒரு இலட்சம் அல்லது ஒன்றரை இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.

ஆகவே எத்தனை குடும்பங்களுக்கு இவ்வாறான வருமானம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தின் ஊடக வரி விதிக்கும் யோசனை, எதிர்காலத்தில் நிலைமை மோசமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply