தற்போதைய ரயில் அட்டவணை டிசம்பர் 05ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக திருத்தப்பட உள்ளது.
இதன்படி களனிவெலி புகையிரத பாதையின் நேர அட்டவணை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் திருத்தியமைக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
ஏனைய, ரயில் மார்க்கங்களின் அட்டவணையும் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 5 மற்றும் 10 நிமிடங்களுக்கு இடையில் புகையிரத நேரத்தில் மாற்றம் இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





