9ஏ சித்திகளை பெற்ற மாணவனை தீ வைத்து காயப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்!

கண்டி – அம்பிட்டிய – மீகனுவ பிரதேசத்தில் வெளிவந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்ற 17 வயதான மாணவர் மீது தீ வைத்து காயப்படுத்திய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைதானவர் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் கைதான போது, அவரது பாதத்தில் காயம் ஏற்பட்டிருந்தமையினால், தற்போது அவர் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைதானவர் பெத்தும் எனப்படும் மலித் நிஸ்ஸங்க சஞ்ஜீவ தென்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் என காவல்துறை தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையானவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *