2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்

நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் 1 மணித்தியாலமும் இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.

இதன்படி, இன்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றுக்கு வந்து உண்மைகளை வெளிப்படுத்தவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின் கட்டணத்தை உயர்த்த அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்திருப்பதன் மூலம் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உபகுழு பாராளுமன்றத்தில் கூடிய போது இது தெரியவந்துள்ளது.

மின்சார வாரியத்தின் தற்போதைய இழப்பை ஈடுகட்ட, மின் கட்டணத்தை 70 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *