_6388293305d57.jpg)
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குதல், கட்சி தாவுதல், அமைச்சுப் பதவிகளைப் பெறல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாகப் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர்கள் எப்போது இணைவார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, பேச்சு நடத்துகின்ற அனைவரும் அரசுடன் இணைவார்கள் என்று சொல்ல முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





