கிளங்கன் வைத்தியசாலை வசப்படும் உயிர் காக்கும் இயந்திரம்!!

கிளங்கன் வைத்தியசாலைக்கு ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் இயந்திரம் கொழும்பு கோட்டை ரோட்டறி கழகத்தின் அனுசரணையில் டிக்கோயா ரோட்டறி கழகத்தின் எற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

கிளங்கன் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ருக்சானி கலப்பதியின் வேண்டுகோளுக்கு இணங்கவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் பஸ்லி பாருக்கின் வழிகாட்டலின் பேரிலும், உயிர் காக்கும் இயந்திரம் கிளங்கன் வைத்தியசாலைக்கு டிக்கோயா ரோட்டறி கழகத்தினரால் கையளிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டை ரோட்டறி கழகத்தின் நிதிப் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், டிக்கோயா ரோட்டறி கழகத்தின் செயலாளர் டாக்டர்.ரவிவர்மன், ரோட்டறி கழகத்தின் உறுப்பினர்களான டாக்டர்.சந்திரராஜன், சோமசுந்தரம், ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு இயந்திரத்தை கையளித்தனர்.

குறித்த இயந்திரமானது மீள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படவுள்ளதாக விசேட வைத்தியர் நிபுணர் ருக்சானி கலப்பதி தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆறு இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.கடந்த காலங்களில் இந்த இயந்திரம் இல்லாமையின் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கோடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் இது மிகவும் தேவையான ஒரு உயிர்காக்கும் இயந்திரம் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply