_638848fe634ce.jpg)
புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து கொள்ளையிட முயற்சித்த 5 பேர் கொண்ட கும்பலை, அந்தப் பகுதி இளைஞர்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.
அதிகாலை 2 மணியளவில் வீட்டை உடைத்து 5 பேர் அடங்கிய குழு ஒன்று கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.வீட்டின் உரிமையாளர் விழிப்படைந்து சத்தமிட்டுள்ளார். கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.
இதனை அடுத்து பிரதேச மக்கள் ,இளைஞர்கள் ஒன்றிணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். மந்துவில் பகுதியில் 3 போரையும், ஏனைய இருவரையும் இரணைப்பாலைப் பகுதியில் வைத்து பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர் கவனித்துள்ளனர்.
அதன் பின்னர் சந்தேக நபர்களையும் , கூரிய ஆயுதங்களையும் பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் .சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம்,சங்கானை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர என்றும், உடந்தையாக செயற்பட்டவர் இரணைப்பாலையைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.





