3 கட்சிகளைச் சேர்ந்த 70 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் – பாலித ரங்கே பண்டார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 3 கட்சிகளைச் சேர்ந்த 70 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 3 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 60-70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பமானதுடன், புதிய அமைப்பாளர்கள் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply