ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராக பணியாற்றி இடைநிறுத்தப்பட்ட சந்தேக நபரான குஷான் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாவலர் இல்லத்துக்குப் பொறுப்பாக இருந்தபோது, இலங்கை பெண்களை அழைத்து வந்த மோசடிகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுகக்ப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து ஓமானுக்குப் பெண்களைக் கடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (01) கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் உண்மைகளை வெளிப்படுத்தியதுபோதே இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்டைச் சேர்ந்த பெண்களை வீட்டுப் பணியாளர்களாக ஓமானுக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தனர்.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான ஆஷா திஸாநாயக்கவும் நீதிமன்றில் முன்னிலையானார்.





