கீர்த்தி சுரேஷ் படத்தை பேஸ்புக்கில் டிபியாக வைத்து ரூ.40 லட்சம் ஏமாற்றிய பெண்!

சமூக வலைத்தளங்களில் நிறைய போலி கணக்குகள் இருந்து வருகிறது. அதன் மூலம் மக்களும் பணம் இழக்கும் மோசடி சம்பவங்களும் பல முறை நடந்திருக்கிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தை டிபியாக வைத்து பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண். இந்த அக்கவுண்ட் மூலம் பல ஆண்களுக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார்.

அவ்வாறு ரெக்வஸ்ட் அனுப்புகையில், பரசுராமன் என்ற நபருக்கும் சென்றுள்ளது. தனக்கு ரெக்வஸ்ட் வந்த ப்ரோபைலை பார்த்த பரசுராமானுக்கு அந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்ற விவரம் தெரியவில்லை. அழகான பெண் நம்முடன் பழகுகிறார் என நினைத்து அந்த போலி அக்கவுண்ட் இடம் காதல் மோகத்தில் விழுந்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பரசுராமன், ஹைதராபாத்தில் கட்டடத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக மாதம் ரூ.30,000 சம்பளத்தில் பணியாற்றி வருகிறார்.

பரசுராமன் போலி அக்கௌன்ட் வைத்து இருக்கும் மஞ்சுளாவுடன் வாட்ஸாப் மூலம் பேசி காதல் வலையில் சிக்கியுள்ளார். மஞ்சுளா பணம் கேட்க்கும் போதெல்லாம் பரசுராம் கொடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆசை வார்த்தை காட்டி பரசுராமின் அந்தரங்க புகைப்படத்தை வாங்கியுள்ளார் மஞ்சுளா. பின்னர் மஞ்சுளா இந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு பரசுராமை ப்ளாக்மைல் செய்து ரூ.40 லட்சம் வாங்கியுள்ளனர்.

அதை வைத்து 100 கிராம் தங்கம், கார், பைக் என பொருள்களை வாங்கி குவித்துள்ள மஞ்சுளா, வீடு ஒன்றையும் கட்ட ஆரம்பித்துள்ளார். பரசுராமன் வேறு வழி இல்லாமல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் விசாரணையில் மஞ்சுளா கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். இதற்க்கு மஞ்சுளாவின் கணவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து மஞ்சுளாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மஞ்சுளாவின் கணவர் இன்னும் தலைமறைவாக இருந்து வருகிறார்.

Leave a Reply