இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் காலை கூட்டம் ஆரம்பிக்கவுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எழுந்துள்ள மோதல்கள், பிடுங்குப்பாடுகளின் மத்தியில் கூட்டம் இடம்பெறுகிறது. கூட்ட நிகழ்ச்சி நிரலில், உள்ளூராட்சி நிறுவனங்களின் தொகுதிகளை வரையறுத்தல் தொடர்பாக எல்லை நிர்ணயகுழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை பற்றி தீர்மானித்தல்.
தேசிய பிரச்சனைக்கான தீர்வு மற்றும் தீர்வுத்திட்டம் பற்றி கட்சியின் நிலைப்பாட்டை ஆராய்தல், மறுசீரமைக்கப்பட்ட கட்சியின் யாப்பை பொதுச்சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பது உள்ளிட்ட விடயங்களை ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





