நாட்டில் மின்வெட்டின் நேரம் அதிகரிக்கும் அபாயம் – மின்சார சபை

நாட்டில் மின்வெட்டின் நேரத்தை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் நேற்று நள்ளிரவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

4000 மெற்றிக்தொன் எரிபொருள் மூலம் 165 மெகாவோட் மின்சாரம் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இன்நிலையில் உரிய நேரத்தில் புதிய எரிபொருள் கிடைக்கவில்லை எனில் மின்வெட்டை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் நிலைமையை பரிசீலித்து மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டுமா என்பதை ஆராயப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply