பொலிஸ் அதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் அவிசாவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு எதிராக பாரிய வழக்கினை தாக்கல் செய்யாது, பிணை வழங்கப்படக்கூடிய வழக்கு ஒன்றை தொடுக்குமாறு கோரி சந்தேகநபர் கையூட்டலை வழங்க முற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளார்.

இதற்காக சந்தேகநபர், அவிசாவளை காவல்நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாவை வழங்க உடன்பட்டுள்ளார்.

அந்த பணத்தில், 25 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்காக அவிசாவளை பொலிஸ்நிலையத்திற்கு சென்ற போது இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் ருவான்வெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply