துறைமுக நகரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்ய வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வர்த்தமானியில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்காக வழங்கப்படும் ஊக்குவிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.

அத்துடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கான பிரிவுகள் மற்றும் குறித்த வணிகங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து இதுவரையிலும் எந்தவொரு அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

வெளிநாட்டு நிறுவனங்களை பதிவு செய்யும் போது 3 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் பதிவு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply