டொலர்களில் மிதக்கும் இலங்கை துறைமுக அதிகார சபை

இலங்கை துறைமுக அதிகாரசபையானது 2022 இல் துறைமுக செயற்பாடுகள் மூலம் 39 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது.

துறைமுக அதிகாரசபையின் வருமானம் இவ்வருடம் 24 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் 2021 ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கிடைத்ததாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்தில் பண்டங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்ததே வருமான உயர்வுக்குக் காரணம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply