ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

தமிழக முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதாவிற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டவர்களும் கட்சி உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply