சொகுசு பஸ் விபத்து இன்று கிளிநொச்சியில் சம்பவம் !

கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் கிளிநொச்சி இரணைமடு அருகில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயம்

இன்று (05.12.2022) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி இரணைமடு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது குறித்த பஸ்ஸில் பயணித்த 22 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply