வீட்டில் மின்விசிறியை சுத்தம் செய்தவருக்கு நேர்ந்த கதி

கல்கமுவ மகுலேவ பிரதேசத்தில் மின்சார விசிறி நபர் ஒருவரின் மேல்  விழுந்ததில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

கடந்த 3ம் திகதி  காலை வீட்டில் உள்ள மின் விசிறியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்ற போது, ​​மின் விசிறி உடல் மீது விழுந்தது. அப்போது   மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

பிரதான பேனலின் ட்ரிப் சுவிட்ச் செயற்படாததால் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார், உடனடியாக செயற்பட்ட பிரதேசவாசிகள் அவரை கல்காமு தள  வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள்  பரிசோதித்தபோது அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிப்பட்டது.

Leave a Reply