நிர்வாணமாக மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் விசாரணை!

வீரவில – வெல்லவாய வீதியில் வீரவில ஆற்றின் முதலாவது பாலத்துக்கு அருகில் நேற்று (04) காலை நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை. 35 வயதான இவர் சுமார் 5 அடி உயரமான மெலிந்த உடல் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலைமுடி சில இடங்களில் வெள்ளையாகக் காணப்படுகிறது. வெளிக்காயங்கள் எதுவும் இல்லை, சடலத்துக்கு அருகில் திறப்பு மோதிரம் என்பவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீரவில பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply