தனியார் பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை வீழ்ச்சி – இனி 50 வீதமான பஸ்களே சேவையில்!

தனியார் பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் நாளாந்த வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் எனவே வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதனை 50 சத வீதமாக குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாரத்தில் குறிப்பிட்ட சில நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது.

இது தவிர சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில்  பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதால்  இந்த நாட்களில்  50 சத வீத பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்துள்ளோம். 

எரிபொருள் விலையேற்றம் காரணமாக, பஸ்களுக்கு  தினசரி வருமானத்தில் 35 சத வீதம் முதல் முதல் 40 சத வீதம் வரை  எரிபொருளுக்காகச் செலவிடப்படுகிறது, 

இது தவிர, குறுகிய தூர பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு  3,500 ரூபா முதல் 4,000 ரூபா வரை செலவிடப்படுகிறது என்றும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply