பாழடைந்த கிணற்றுக்குள் வீழ்ந்த யானைக் குட்டி – உயிருடன் மீட்ட மக்கள்

புத்தளம் கருவலகஸ்வெவ செல்லகண்டல் பகுதியில் யானைக்குட்டியொன்று பாழடைந்த கிணற்றுக்குள் வீழ்துள்ளது.

இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ள யானைக்குட்டியை அவதானித்த அப்பகுதி மக்கள் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விரைந்து சென்று கிணற்றுக்குள் வீழ்ந்த யானையைப் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த யானை பெக்கோ இயந்திரத்தின் உதவியோடு உயிருடன் மீட்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டுள்ளது.

குறித்த யானை ஒரு வதுடையக் குட்டியென கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

Leave a Reply