இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க உள்ளிட்ட நிர்வாக சபையினரை உடனடியாக பதவிவிலகுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் அறிவிக்காமல் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரையான விசேட பஸ் சேவையை இடைநிறுத்தியமையால் அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.





