மாண்டஸால் திடீரென மறைந்து போன தேவாலயம்!

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் A35 வீதியில் அரை அடிக்கு மேல் நீர் பாய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை புதுக்குடியிருப்பு இரனைபாலையில் உள்ள குழந்தை இயேசு தேவாலயம் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் கூரை சேதமாகியுள்ளது.

அத்துடன் தேவாலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இதனால் குறித்த வீதியை பயன்படுத்துவோர் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply