மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஆரம்பம்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (05) ஆரம்பமாகின்றது.

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 2 ஆம் திகதி நிறைவடைந்தது.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதற்கட்டம் நடைபெறவுள்ளதோடு, நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சை காரணமாக எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி 19 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாகவும், 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணைக்கான இறுதிக் கட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

The post மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஆரம்பம்! appeared first on உதயன் | UTHAYAN.

Leave a Reply