திருமலையில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

திருகோணமலை – வீரமாநகர் கிராமத்திற்குள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் மரங்களையும், பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.



இதன்போது தென்னை, வாழை,சோளம், நிலக்கடலை,மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

தாம் கஷ்டப்பட்டு அதிக செலவு செய்து செய்த பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதால் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வீரமாநகர் பயிர்ச்செய்கையாளர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

இதற்கு அரசாங்கம் ஏதாவது உதவிகள் செய்ய வேண்டுமெனவும், யானை பாதுகாப்பு வேலி அமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தோப்பூர் -வீரமாநகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

Leave a Reply