சிறையில் உள்ள காதலனுக்கு ,ஐஸ் போதைப்பொருள் எடுத்துச் சென்ற பாடசாலை மனைவி

தும்பரை  சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப் பொருளை எடுத்துச் சென்ற 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

   குறித்து மாணவி பல்லேகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 வயதுடைய குறித்த சந்தேக நபருக்கு,அவரின் சகோதாரி ,தனது சகோதரனிடம் ஒப்படைக்குமாறு குறித்த ஐஸ் போதைப்பொருளை காதலியிடம் கொடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ,  காற்சட்டையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த  2 சிறிய பைகளில் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் மாணவிக்கு போதை பொருள் அடங்கிய பொதியை வழங்கிய பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லேகல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply