கூரையைப் பிரித்து வீட்டுக்குள் நுழைந்து பெண் துஷ்பிரயோகம்! இலங்கையில் தொடரும் சீரழிவுகள்

ஹம்பாந்தோட்டை, படகிரியவில் உள்ள வீடு ஒன்றுக்குள் இரவு நேரத்தில் கூரையை பிரித்து நுழைந்து, 49 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்ந்த  குற்றவாளி ஒருவருக்கு 11 வருட கடூழியச்  சிறைத்தண்டனையும், 15,000 ரூபா அபராதமும் விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிவான்  பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

ஹம்பாந்தோட்டை, பதகிரிய, யஹங்கல பகுதியைச் சேர்ந்த  37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply