இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு – வெளியான விசேட அறிவிப்பு

மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கும், 24 ஆம் திகதி முதியவர்களுக்கும், தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

“விலங்கினங்கள் எமது நண்பர்கள்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் மக்களுக்காக நடத்தப்படும் விசேட நிகழ்ச்சித் தொடருக்கு அமைவாக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டுப் பணிப்பாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply