அதிவேக புகையிரதத்துடன் கார் மோதி கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கம்புருகமுவ-பொரொல்ல வீதி, புகையிரத கடவையில் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அதிவேக புகையிரதமானது கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தெனிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் புபுது பிரியங்க (41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது அவர் ஓட்டிச் சென்ற கார் புகையிரதத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply