தமிழரசுக் கட்சியின் திட்டங்களை முன்னெடுப்பது சுமந்திரனா? தலைவர் மாவை எங்கே? SamugamMedia

தமிழரசுக் கட்சியின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் எம்.ஏ.சுமந்திரனால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் போன்றே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கரைத்துறைப் பிரதேசசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுடன் தமிழரசுக்கட்சி செய்த உடன்பாடு என்பது கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தமா அல்லது
சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான ஒப்பந்தமா என்பது தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது தமிழரசுக் கட்சியின் தலைவரும் இல்லை, செயலாளரும் அங்கு இருக்கவில்லை. இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான ஒப்பந்தமா? அல்லது சுமந்திரனுக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்குமான ஒப்பந்தமா? என்பது எனக்குத் தெரியவில்லை.

தமிழரசுக் கட்சியின் நடத்தைகளில், வேலைத்திட்டங்களில் கட்சியை விட சுமந்திரன் எடுப்பதுதான் தீர்மானம் போல் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply