பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது! SamugamMedia

களனி பகுதியில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த களனி பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் ஹர்ஷன திஸாநாயக்க ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி நேற்றிரவு களனி பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை இன்றைய தினம் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply