இலங்கையில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவின்றி தவிப்பு! – வெளியான அதிர்ச்சி அறிக்கை SamugamMedia

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 சத வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையில் இந்த நிலை தொடர்கிறது.

அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் 28 சதவீத மக்கள் அதாவது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் இதற்கு தீர்வாக, விவசாய உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பான தெளிவுபடுத்தல்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply