ரிக்ரொக்கில் மலர்ந்த காதல் : யாழ் சிறுமி திருமலையில் மீட்பு!SamugamMedia

யாழில் ரிக்ரொக் செயலி மூலம் காதல்வயப்பட்ட சிறுமியொருவர் காதலனை சந்திப்பதற்கு திருகோணமலைக்குச் சென்று அங்கு அநாதரவாக விடப்பட்ட நிலையில் பாது காப்பாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் அண்மையில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி ரிக்ரொக் செயலி மூலம் மலர்ந்த காதல் காரணமாக காதலனைச் சந்திப்பதற்கு திருகோணமலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு காதலன் வருகை தராத நிலையில் அநாதரவாக சிறுமி மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலனை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply